1. அபிநந்தனை விடுவிக்க சர்வதேச அழுத்தம் எப்படித் தரப்பட்டது?

2. சவூதி அரசர் தனது அமைச்சரையே பாகிஸ்தானுக்கு அனுப்பினார்…

3. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா – பாகிஸ்தான் பிரச்னையில் அமெரிக்கா தலையிடும் என்றார்…

4. மேலும் ட்ரம்ப் நீண்ட பல ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தியா – பாக் பிரச்னைக்கு விரைவில் சுமுக முடிவு ஏற்படும் என்றும் ட்ரம்ப் கருத்துத் தெரிவித்தார்…

5. ஈரான், ஆஃப்கானிஸ்தான் நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான நிலையை எடுத்தன…

6. ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. அமெரிக்கா – ரஷ்யா இரண்டும் இந்தப் பிரச்னையில் தலையிடப் போவதாக அறிவித்தன…

7. ஜெனீவா ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அபிநந்தன் விடுவிக்கப்பட இருக்கிறார். ‘எதிரி நாட்டு வீரர் சிக்கினால் அவரை சித்ரவதை செய்யக் கூடாது’- ‘ஏழு நாள்களுக்குள் உரிய நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – ‘உடலை காயப் படுத்தக் கூடாது ; கொல்லக் கூடாது’- ‘ஏற்கனவே போரில் காயப்பட்டு இருந்தால் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்’-.. இப்படி ஜெனீவா ஒப்பந்த விதிகளை விவரித்தது பாலிமர் நியூஸ்!

8. மேலும் எப்படி அபிநந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை எதிரிகள் சுற்றி வளைப்பதற்குள் அழித்தார்?

9. அவர் பாராசூட்டில் தரையிறங்கியதும் பாகிஸ்தானிய கிராம வெறிபிடித்த மக்கள் தன் மீது சுற்றி வளைத்துக் கல்லெறிந்த போது, தன் கைத்துப்பாக்கியை வானத்தை நோக்கிச் சுட்டும், அவர்களைக் குறிபார்த்தும் அவர்கள் தன்னை நெருங்கி விடாமல் எப்படி நிறுத்தி வைத்தார்?

10. அவர்கள் அஞ்சி ஒதுங்கி, பிறகு பாக் ராணுவம் வந்து கைது செய்யும் வரை, இடைப்பட்ட சிறு பொழுதில் எப்படித் தனது ஆவணங்களை எதிரி கையில் சிக்காமல் அழித்தார்?

தமிழ் டிவி சேனல்களில் வித்தியாசமான – பாலிமர் டிவிக்கு நன்றிகள்

Tags:

Leave a Reply