கர்நாடக சட்ட சபை தேர்தலுக்கான பிரசாரம் 5 மணியுடன் முடிந்தது. பிரசாரம்முடிவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா தலைவர் அமித் ஷா, பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

 

மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் சித்தராமையா அரசு தோல்வியை தழுவி விட்டது என பா.ஜனதா விமர்சனம்செய்தது.

 

கர்நாடகாவில் பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 24-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர், காங்கிரஸ் இதனை அரசியலில் ஒருபகுதியாக கருதுகிறது. குற்றவாளிகளை கைதுசெய்ய காங்கிரஸ் அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் அமித் ஷா. விவசாயிகளுக்காகவும் கர்நாடக அரசு ஒன்றும் செய்யவில்லை என்றார். பாரதீய ஜனதா வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும், பாரதீய ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் அமித் ஷா. போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தை குறிப்பிட்டு காங்கிரஸ் ஜனநாயக மற்ற வழியில் வெற்றிப்பெற முயற்சி செய்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply