பா.ஜ.க,வின் குஜராத் கவுரவயாத்திரையின் நிறைவையொட்டி, நடந்த பொதுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:


வரும் சட்ட சபை தேர்தலில், வளர்ச்சி திட்டநடவடிக்கைகளை முன்வைத்து, காங்கிரஸ் கட்சியால் போட்டியிடமுடியாது. குஜராத் மக்களுக்கு எதிராகவே, காங்கிரஸ் செயல்பட்டு வந்தது.சர்தார் சரோவர் திட்டத்தை நிறைவேற்ற அவர்கள் முயற்சி மேற்கொள்ள வில்லை.
 

அதனால், வரும் தேர்தலில், பா.ஜ.க,வின் வளர்ச்சி திட்டங்களுக்கு முன், காங்கிரஸ்சின் வாரிசு அரசியல் எடுபடாது.


பலதலைவர்களை உருவாக்கிய மிக நீண்டவரலாறு உடைய காங்கிரஸ் கட்சி, தற்போது பொய்யை பரப்பிவருகிறது; மக்களிடையே அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு சேவை வரிவிதிப்பு முறை குறித்து, பலபொய் தகவல்களை காங்கிரஸ் பரப்பிவருகிறது.


இந்த வரிவிதிப்பு முறையை கொண்டு வந்ததில், காங்கிரஸ் கட்சிக்கும் பங்குள்ளது. ஜி.எஸ்.டி.,யில் வர்த்தகர்களுக்கும், மக்களுக்கும் ஏதாவதுபிரச்னை இருந்தால், அதற்கு தீர்வுகாண்போம். லஞ்சம், ஊழலுக்கு துணைநின்ற காங்கிரஸ் கட்சி, வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளும் நம்மை குறைகூறுகிறது. எந்ததிட்டத்தை அறிவித்தாலும், அதை குறை கூறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்; அவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்.இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply