தமிழகத்தில் பா.ஜ.க., ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. இதற்காக பலம்வாய்ந்த கூட்டணியை அமைத்து வருகிறோம். பா.ஜனதா சார்பில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் விருப்பமனு வாங்கப்படுகிறது தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும். ஊழலற்ற ஆட்சி அமைத்து மக்களுக்கு சிறப்பான சேவைகள் செய்யவும் ஆர்வம் உள்ளவர்கள் பா.ஜனதா சார்பில் போட்டியிட விருப்பமனு செய்யலாம்.

கூட்டணி பற்றிய விஷயங்களை மேலிடபொறுப்பாளர் பிரகாஷ்ஜவடேகர் மேற்கொண்டு வருகிறார். ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். பாஜக.,வை

தேர்தல் நேரத்தில் அவர்கள் தமிழர்களின் உணர்வுகளை அரசியல் ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் சிறந்த பட்ஜெட்டை சகித்து கொள்ள முடியாத எதிர்க் கட்சியினர் அவதூறு பரப்புகிறார்கள். இது எந்த வகையிலும் தமிழகத்தில் எங்களை பாதிக்காது.

தமிழக பாரதீய ஜனதா கட்சித்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது.

Leave a Reply