பா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக மத்திய அமைச்சர் உமா பாரதியை அக்கட்சியின் தலைவர் அமித்ஷா நேற்று நியமனம் செய்தார்.

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் சமீபத்தில் தெரிவித்தார். ஆனால் இதுதொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டி ருந்தார்.

இவரைத் தொடர்ந்து உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி மக்களவை தொகுதி எம் பியும் மத்திய குடி நீர் வடிகால்துறை அமைச்சருமான உமாபாரதி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன் என கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக மத்திய தேர்தல் ஆலோசனைகுழு கூட்டத்திலும் அக்கட்சி தலைமையிடம் தனது கருத்தை வலியுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று உமா பாரதியை பாஜக தேசிய துணைத் தலைவராக கட்சியின் தலைவர் அமித்ஷா நியமனம் செய்தார். டெல்லியில் நேற்று இரவு பாஜகவின் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்ட ஜே. பி. நட்டா இதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.

One response to “பா.ஜ.க,.வின் தேசிய துணைத் தலைவராக உமா பாரதி நியமனம்”

 1. செ.சுகுமாா் உடன்குடி says:

  தூத்துக்குடி மாவட்டத்தில் பாரதிய ஜனதா-அதிமுக கூட்டணி சாரபில் போட்டியிடும் வெற்றி வேட்பாளா் திருமதி.தமிழிசை அவர்கள் தூத்துக்குடி தொகுதிக்கென ஒரு தனி அறிக்கையை வெளியிட்டுள்ளாா். அருமையான தோ்தல் அறிக்கை.
  இந்து சமய சார்பு என்பது சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல.1000 ஆண்டுகளாக அந்நியமதத்தவர்கள் ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட இந்து சமூக நலன்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்து சமூகத்தின் கலாச்சார ஆன்மீக நரம்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது நமது கொள்கைதான்.ஆனால் நமது தோ்தல் அறிக்கையில் இந்து கோவில் நிா்வாகம் குறித்தோ இந்து இளைஞர்களுக்கு முறையான சமய கல்வி அளிப்பது குறித்தோ எந்த திட்டமும் தெரிவிக்கப்படவில்லை. இளைஞா்களின் ஆனமீக நலன்களை புறக்கணித்ததால்தான் ” பொள்ளாச்சி” சம்பவங்கள் அரங்கேரி வருகின்றது.
  01.திருக்கோவில் நிர்வாகம் சீரமைக்கப்படும்.அறங்காவலா்கள் அரசியல் சார்பற்று நியமிக்கப்படுவார்கள்
  02. அனைத்து இந்து இளைஞர்களுக்கும் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் கற்றுக் கொடுக்கப்படும்.விவேகானந்தா கேந்திரம் போன்ற அமைப்புகள் அரசின் நிதி உதவியுடன் இதனை செயல்படுத்தும்.
  03.யோகா அனைத்து இந்துக்களுக்கும் விரும்பும் பிறமதத்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். தினவரி நமது வாழ்வில் யோகா இடம் பெறும் அளவில் தொடா்ந்து கற்றுக் கொடுத்து விழிப்புணா்ச்சி ஏற்படுத்தப்பட ஆவன செய்யப்படும்.
  04.தேவாரம் திருவாசகம் என்று அருமையான தமிழ் வேதங்கள் இருந்தாலும் முறையாக கற்றுக் கொடுக்கப்படவில்லை.அனைத்து இந்துககளுக்கம் தேவாரம் திருவாசகம் கற்றுக் கொடுக்கப்பட்டு திருவாசகம் முற்றோதுதல் அனைத்து இந்து ஆலயங்களிலும் நடத்தப்படும்.
  05.இசைக் கருவிகள் வாசிக்க கற்றுக் கொடுக்கப்படும்.
  —————————
  இது போன்ற பல திட்டங்களை அறிவித்து இந்து வாக்காளர்களைக் கவரலாம்

Leave a Reply