பா.ஜ.க.,வை விமர்சிக்கும் தகுதி குஷ்புவுக்கு இல்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
 பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாலாற்றின் குறுக்கே புதிதாக அணைகட்டும் ஆந்திர அரசின் முயற்சி கண்டிக்கத் தக்கது. இதனை தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லியில் நடைபெறஉள்ள முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்அமைச்சர் பங்கேற்று மாநில மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என்றார்.
பின்னர் தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று ஈவிகேஎஸ். இளங்கோவன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஒருதொகுதியில் கூட வெற்றிபெறாத பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ராஜினாமா செய்வாரா? என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளாரே? என்று அவரிடம் கேள்வி எழுப்பட்டது.
தமிழிசை சவுந்தர ராஜன் பதில் அளிக்கையில் குஷ்பு விமர்சனம்செய்யும் அளவுக்கு தமிழக பா.ஜ.க இல்லை. அதற்கு அவருக்கு எந்த தகுதியும்இல்லை. சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பு ஏற்று ஈவிகேஎஸ். இளங்கோவன் ராஜினாமா செய்ய வில்லை. அப்படி இருந்தால் தேர்தல் முடிவு வெளியாகிய உடன் அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். உள்கட்சி விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் ராஜினாமா செய்திருக்கிறார் என்று கூறினார்.

Leave a Reply