பிரதமர் மோடியும், குஜராத் பா.ஜ.க, வினர் ஒருவரும் போனில்பேசும் ஆடியோ வாட்சப்பில் வைரலாக பரவிவருகிறது. குஜராத் மாநிலம் வதோராவில் ஸ்டேஷனேரி கடை நடத்திவருபவர் கோபால்பாய் கோஹில் இவர் பா.ஜ.க,வில் இணைந்து கட்சி பணியுமாற்றி வருகிறார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது இவர் வதோராதொகுதியில் வார்டு மட்டத்தில் பணியாற்றியவர்

கடந்த 19ம் தேதி மாலை 4.30 மணிக்கு அவருக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்த உரையாடல் முழுவதும் குஜராத்தி மொழியில் இருந்தது. இதில் பிரதமர் மோடியும் – கோஹிலும் பரஸ்பரம் தீபாவளி வாழ்த்து க்களை பரிமாறிக் கொண்டதுடன் குஜராத் தேர்தல்குறித்தும் பேசினர்.

அப்பொழுது கோஹில் குஜராத் தேர்தலில் காங்., செய்துவரும் பொய் பிரச்சாரங்களை எப்படி சமாளிப்பது என்று கேட்டபோது பிரதமர் மோடி ‛‛ ஆரம்பி்த்த காலத்தில் இருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இதுபோல் நடந்த பொய் பிரச்சாரங்களின் போதும் மக்கள் நம்பிக்கையை பெற்று நாம் வெற்றிபெற்றுள்ளோம்.

நம் மீது பொய்களும் கேலிகளும் இல்லாத ஏதாவதுதேர்தலை உங்களால் சொல்ல முடியுமா? என்னை ரத்தகரை படிந்தவர், கொலைகாரர் என்று எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள் இதையும் மீறி மக்கள் நம்பிக்கையை நாம்வென்றுள்ளோம். மக்களுக்கு என்றும் உண்மை எது என புரியும்.

முன்னர் வாய் வழியாக பொய் பிரச்சாரங்களை பரப்பினர். இன்று வாட்ஸ் சப் வழியாக பரபரப்பி வருகின்றனர். இதுகுறித்து நாம் கவலை கொள்ள தேவையில்லை. நீங்கள் இதனால் உங்கள் கவனத்தை சிதறவிடாதீர்கள். நமது கொள்கையையும், பார்வையையும் உயர்வாகவைத்து உழையுங்கள். பொய்வதந்தி, கிசுகிசுக்களுக்கு கவனம்செலுத்தி நேரத்தை வீணடிக்காதீர்கள்.

நாம் எல்லா வற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும். அதன் மூலம் பொய்பிரச்சாரங்களை தவிர்க்கலாம். நாம் நம்செயலில் தைரியமாகவும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். உண்மை தானாக மக்களை சென்றடையும்.'' என கூறினார்.

Leave a Reply