முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிஎஸ்எல்வி -சி31 செயற்கைக் கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டிலேயே தயாரான ஐஆர்என்எஸ்எஸ்-1ஐ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

பிஎஸ்எல்வி – சி 31 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

கடல்சார் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது. அதன்படி ஏற்கெனவே 4 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுவிட்டன.

இப்போது 5-ஆவது செயற்கைக்கோளாக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1- ஐ, பி.எஸ்.எல்.வி. சி-31 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை காலை 9:31 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply