பிகார் முதல்வராக நிதீஷ்குமார் 7-வது முறையாக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்று கொண்டார்.

பிகார் பேரவைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி 125 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்தது. இந்த கூட்டணியில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தபோதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமாரே முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம், பாஜக சார்பில் 2 பேர் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்க பாஜக திட்டமிட்டது.

இந்தநிலையில் பிகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ் குமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பாகு சௌஹான் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், நிதீஷ்குமார் தொடர்ச்சியாக 4-வது முறையாக பிகார் முதல்வராகியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களா பதவியேற்றுகொண்டனர்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.