மக்களவை தேர்தலை முன்னிட்டு பிகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் இந்தபிரசாரம் தொடங்கியது.

இதையொட்டி, பாட்னா நகர் முழுவதும் பிளக்ஸ், பேனர்களை பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சையாக செய்தி ருந்தன. மிகப்பெரும் அளவில் மக்களை இந்த கூட்டத்தில் பங்கேற்க வைக்க ஏற்டுகள் நடந்தன. குறைந்தது 5 லட்சம் பேராவது பங்கேற்று இருப்பார்கள்.

2009-க்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேடையில் பங்கேற்றார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இன்று காந்தி மைதானத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி. முன்பு 2013 தேர்தல் பிரசாரத்தி ன்போது பீகார் வந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.\

பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார். 60 மெட்டல் டிடெக்டர்கள் வந்திருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 30 ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் பஸ்களை பாஜக தொண்டர்கள் புக் செய்திருந்தனர்.

Leave a Reply