இந்தியர்கள் உடலை கட்டுகோப்பாக வைத்து கொள்ளவும், உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், ‘பிட் (FIT) இந்தியா’ இயக்கத்தை துவக்கிவைத்த பிரதமர் மோடி, ஆரோக்கிய இந்தியாவே எனது லட்சியம் எனக்கூறினார்.

மத்திய அரசின் சார்பில், துாய்மைஇந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தவரிசையில், டில்லியில் இன்று(ஆக.,29) நடந்த விழாவில் ”பிட் இந்தியா” என்ற திட்டத்தை, பிரதமர் மோடி, துவக்கி வைத்தார்.

ஒவ்வொருவரும் உடல்திறனை வளர்த்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற் பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றவேண்டி , இந்த திட்டம் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கு சிந்து, ஹிமாதாஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

Comments are closed.