ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்யாசம் என்னன்னா ரஜினி எந்த மதத்தையும் புண்படுத்தலை விமர்சிக்கலை, ஆனா கமல் திராவிட கழக வீரமணியை போல் பேசிக் கொண்டிருக்கிறார். அன்பே சிவம்னு ஒரு படம். கமலுக்கு அவர் தாய் திருநீறு பூசுவார் உடனே அதை கையால் அழிப்பார் கமல். ஆனால் இன்னொருவர் சிலுவை ப் போட்டுக் கொண்டு நல்லவராக‌ வருவார்.

சிவாஜியை விட இன்னோரு நடிகர் பிறக்க வேண்டும். அவரை நடிகராக ஏற்றுக் கொண்ட மக்கள் அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சமஸ்க்ருதத்தை எதிர்ப்பேன் ஆனால் என் மகளுக்கு 'ஸ்ருதி'னு பேரு வைப்பேன். ஸ்ருதினா வேதம் என்று அர்த்தம். சொல்லறது வேற செய்யறது வேற. அதனால் குழப்பவாதியா இருக்கார். ஏற்கனவே ஒரு நாத்திக இந்துவிரோத திராவிட கழகம் இருக்கு. தமிழ்நாட்ல இன்னொரு இந்து விரோத கட்சிக்கு அவசியம் இல்லைனு சொல்றேன் நான். நான் ஏழு வயதில் இருந்து 53 வருடன்க்களாக‌ அரசியலில் இருக்கிறேன் அதனால் பொது வாழ்க்கை என்பது எனக்கு புதிதல்ல…..

இவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஊது குழலாக தள்ளப்பட்டிருக்கிறாரோ ? எனும் சந்தேகம் வலுக்கிறது. இவரை ஸ்டாலின் பின்னனியில் இருந்து குளத்துக்குள்ள தள்ளி விட்டுட்டார்., இப்போது இவர் தத்தளித்து கொண்டிருக்கிறார் போல் தோன்றுகிறது. நீங்கள் இந்து விரோதியல்ல, இந்துக்களை நக்கலடிக்கின்ற,, நையாண்டி செய்கின்ற, கேவல புத்தி உடையவர் அல்ல என்பதை தெளிவு படுத்துங்கள்.

Leave a Reply