ஹிந்தி டிவி துறையில் நடித்து அதன்பிறகு பாலிவுட்டில் நடிகராக அறிமுகம் ஆனவர் சுஷாந்த்சிங் ராஜ்புட். இந்திய அணியின் கேப்டனாக பலவெற்றிகளை குவித்த மகேந்திர சிங் தொணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த்சிங் தான் நடித்து இருந்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருந்தவர், இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை பற்றி தற்போது போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் இப்படி யாரும் எதிர்பார்க்கா வகையில் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து பிரபலங்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது பற்றி ட்விட்டரில் உருக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் சுஷாந்த்பற்றி பதிவிட்டுள்ளார். “சுஷாந்த் சிங் ராஜ்புட்.. பிரகாசமான இளம்நடிகர் இவ்வளவு சீக்கிரம் போய் விட்டார். அவர் டிவி மற்றும் சினிமாவில் ஜொலித்தவர். இந்த பொழுது போக்கு துறையில் சுஷாந்த் சிங் வளர்ச்சி பலரையும் ஈர்த்த ஒன்று. நினைவில் கொள்ளத்தக்க பல பர்ப்பார் மென்ஸுகளை அவர் விட்டு சென்றிருக்கிறார். அவர் இறந்து விட்டார் என்று அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ஓம்சாந்தி” என பிரதமர் ட்விட் செய்துள்ளார்.

Comments are closed.