கோட்சேவை தேச பக்தர் எனக் கூறிய சாத்வி பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒருஹிந்து; அவரது பெயர் கோட்சே’ என, மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான, கமல்கூறியிருந்தார். இதுகுறித்து, ம.பி., மாநிலம் போபாலில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் சாத்வி பிரக்யா சிங் கூறியதாவது: நாதுராம் கோட்சே, ஒருதேசபக்தராக இருந்தார்; அவரை பயங்கரவாதி என்பவர்கள், கண்ணாடியில் தங்கள் முகத்தை பார்க்கட்டும். அவர்களுக்கு, தேர்தலில், மக்கள் பதிலடி கொடுப்பர்.இவ்வாறு, அவர்கூறினார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக டிவி ஒன்றுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டி: மஹாத்மா காந்தி, கோட்சே குறித்து தெரிவிக்கப் பட்ட கருத்துகள் தவறானவை. மோச மானவை. தனது பேச்சிற்காக பிரக்யா சிங் மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அவரை என்னால், மன்னிக்க முடியாது எனக்கூறியுள்ளார.

இதனிடையே, கோட்சே குறித்த பிரக்யாசிங், மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, எம்.பி., நலீன் குமார் கதீல் ஆகியோரின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு உட்பட்டதல்ல. இது அவர்களின் தனிப்பட்ட கருத்து. பா.ஜ., ஒன்றும் செய்யமுடியாது. 3 பேரும் தங்களின் கருத்துகளை திரும்ப பெற்றுகொண்டு, மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இருப்பினும், அவர்களின் கருத்துகள் கட்சியின் கொள்கைக்கு எதிராக உள்ளதால், அவர்களுக்கு விளக்கம்கேட்டு 10 நாட்களுக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும் எனக்கூறினார். இதனை தொடர்ந்து 3 பேருக்கும் பா.ஜ.,ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments are closed.