அடுத்த பிரதமராக மோடி வருவதற்கு பீகார் மாநிலத் தவர்கள் 61 சதவீதம்பேர் ஆதரவு தெரிவித் துள்ளார்கள்.அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப் படுவார்கள் என்ற கருத்துகணிப்பை இந்தியா டுடே பீகார் மாநிலத்தில் நடத்தியது.

இதில் பிரதமர் மோடிக்கு 61 சதவீதம்பேர் ஆதரவு அளித்துள்ளார்கள். ராகுலுக்கு 34 சதவீதம்பேர் ஆதரவு அளித்துள்ளார்கள். மத்திய அரசு மீது பீகார்மக்கள் 60 சதவீதம் பேர் திருப்தி அடைந்ததாகவும், 36 சதவீதம் பேர் அதிருப்தி அடைந்துள்ள தாகவும் 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க வில்லை என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஜாதிவாரி அடிப்படையில், பிரதமர் மோடிக்கு ஓபிசி பிரிவினர் 24 சதவீதம் பேரும் பொதுபிரிவினர் 17 சதவீதம்பேர் உட்பட 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த செப்.,ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 58 சதவீதமாகவும், நவம்பரில் 60 சதவீதமாகவும் டிசம்பரில் 61 சதவீதமாக ஆதரவு பெருகிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுலுக்கு செப்.,ல் 32 சதவீதமும், நவம்பரில் 28 ஆக குறைந்து டிசம்பரில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply