புயல்பாதித்த பகுதிகளைப் பார்வையிடப் பிரதமர் வரவில்லையே எனக் கேட்டதற்கு பிரதமரின் சார்பாகத்தான் பார்வையிட்டதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது, நடிகை பிரியங்கா சோப்ராவின் திருமண வரவேற்பு விழாவுக்குச்செல்ல நேரம் ஒதுக்கும் பிரதமர், தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட ஏன்வரவில்லை எனச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்கு கடந்த ஆண்டுகளில் சென்றதையெல்லாம் சமூகஊடகங்களில் குறிப்பிடுவதாக தெரிவித்தார். பிரதமரின் சார்பாக தானும் நிர்மலா சீதாராமனும் பாதிக்கப்பட்டபகுதிகளை பார்வையிட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply