பிரதமரின் ஜன் தன் திட்டத்தால் கிராமத்தில் வசிப்பவர்கள் அதிகளவில் சேமிக்க துவங்க விட்டனர். இதனால் அவர்கள் மது அருந்துவது, புகையிலை பொருட்களை உபயோகிப்பது குறைந்துவிட்டது என எஸ்பிஐ.,யின் பொருளாதாரபிரிவு நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : பிரதமரின் இந்ததிட்டத்தால் கிராமப்புறங்களில் பண வீக்கம் குறைந்துள்ளது. ரூபாய் நாட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பிறகே 30 கோடிக்கும் அதிகமானவர்கள் ஜன்தன் கணக்கு துவக்கி உள்ளனர். 10 மாநிலங்களில் மட்டும் 23 கோடி பேர் ஜன்தன் திட்டத்தில் இணைந்துள்ளது. இதில் உ.பி.,(4.7 கோடி) முதலிடத்திலும், பீகார் (3.2 கோடி) 2வது இடத்திலும், மேற்குவங்கம் (2.9 கோடி) 3வது இடத்திலும் உள்ளது.


அதிகமானவர்கள் ஜன் தன் திட்டத்தில் இணைந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் உ.பி., பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், அசாம், ஒடிசா, ஜார்கண்ட், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு மக்கள்பணத்தை சிக்கனமாக செலவிட துவங்கி உள்ளதால் அவர்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரொக்கமாக பணத்தை செலவிடுபவர்களை விட கார்டுகள் மூலம் பணபரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply