பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், நாடாளுமன்ற வளாகத்தில் புதன் கிழமை  சந்தித்துப் பேசினார். அப்போது மகாராஷ்டிரத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் பிரதமர் மோடியிடம் இது தொடர்பான மனுவை அளித்தார். அதில்,

மகாராஷ்டிரத்தில் பெய்த பலத்தமழையின் காரணமாக மராத்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் பயிர்களுக்கு பலத்தசேதம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 2 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்சேத மதிப்பீட்டை சேகரித்துள்ளேன். விரைவில் முழு விவரத்தையும் உங்களுக்கு (பிரதமர் மோடி) அனுப்பிவைக்கிறேன்.

மகாராஷ்டிரத்தில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதால், விவசாயிகள் பிரச்னையில் பிரதமரின் தலையீடு அவசியமாகிறது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிதியுதவி வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை உடனடியாக பூர்த்திசெய்யும் நிலையில், பிரதமருக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என அந்த மனுவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் தேசிய வாத காங்கிரஸ் பாஜக.,வுடன் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. சிவ சேனா ஆட்சியமைக்க தேசிய வாத காங்கிரஸ்வுடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிவ சேனாவின் நம்பக தன்மையில் ஐயம் இருப்பதால் சரத் பவார் பிடி கொடுக்க வில்லை. மேலும் பாஜகவுடன் சரத்பவார் கூட்டணி வைத்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை என்று கூறப்படுகிறது.

Comments are closed.