பிரதமர் நரேந்திர மோடியை, பிடிபி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்திசயீது நேற்று சந்தித்துபேசினார். இதைத்தொடர்ந்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மீண்டும் கூட்டணி அரசு அமையும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் பி.டி.பி., – பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. முதல்வராக இருந்த பிடிபி., தலைவர் முப்தி முகமதுசயீது ஜனவரியில் மரணமடைந்தார். அதை தொடர்ந்து கூட்டணி அரசு தொடர்வதில் இருகட்சிகளும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜனாதிபதி ஆட்சி அமலுக்குவந்தது.இந்நிலையில், ஏப்., 9ம் தேதிக்குள் புதிய அரசு அமையாவிட்டால் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சட்டசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்து விடும். அதைத்தொடர்ந்து, மீண்டும் அரசு அமைப்பது குறித்து இரு கட்சிகளுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சு நடந்துவருகிறது.

 

கடந்த வாரம், டில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார் மெகபூபா. இந்த நிலையில் நேற்றுகாலை, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.''பிரதமருடனான சந்திப்பு நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. கட்சியின் எம்எல்ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்,'' என மெகபூபா தெரிவித்தார்.

Leave a Reply