நேபாளத்தில் பிரதமர் மோடி அடுத்தமாதம் திறப்பதாக இருந்த, அலுவலகத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நேபாளம் தும்லிங்டாரில் உள்ள காண்ட்பரி 9 என்ற பகுதியில், இந்தியஅரசின் உதவியுடன் 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய நீர்மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

2020 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத் திற்கான அலுவலகத்தை, பிரதமர் மோடி வரும் மே மாதம் 11 ம் தேதி திறந்துவைப்பதாக இருந்தது. இந்நிலையில், அந்த அலுவலகத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில், அலுவலகத்தின் தெற்குசுவர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, குண்டுவெடிப்புக் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply