நாடாளுமன்ற தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அடுத்த மாதம் 10 மற்றும் 19-ம் தேதிகளில், பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரவுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் பரப்புரை கூட்டங்களில் பேசவருகிறார். இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 10 மற்றும் 19-ம் தேதிகளில், பிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். அடுத்த மாதம் 10-ம்தேதி, திருப்பூர் அல்லது கன்னியா குமரியில் நடைபெறும் பரப்புரை கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொள்கிறார் என்றும், 19-ம்தேதி சென்னையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இம்மாதம் 27-ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடி, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகை தமிழகத்தில், மாபெரும் மாற்றத்தை உருவாக்கி தரும் என, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு துரோகம்செய்ய நினைக்கும் கூட்டம்தான், எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவிற்குவரும் மோடிக்கு, கருப்பு கொடி காட்டுவதாக அறிவித்துள்ளது, என்றும் குறிப்பிட்டார்.

மேலும், எந்த கட்சியோடும் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு கிடையாது என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply