அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொது தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:

 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில்செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூறமுடியாது. ஆனால், ஏழை, நடுத்தரமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது.

குறிப்பாக, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் வகையில் நாம்முன்னேறிய போதிலும் 50 சதவீத மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமப் புறங்களில் கழிவறைகள் கட்டுவது, அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குவது, அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி, அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான அரசு செயல் படுத்தி வருகிறது. இதனால் 2019-ல் நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply