பிரதமர் நரேந்திரமோடி, உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர் என்றும், அவரது செயல்பாடுகள் சுவாமி விவேகானந்தரை ஒத்துஇருப்பதாக பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.


ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு பிறகு முதன் முறையாக மும்பை வந்த அமித்ஷா, மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகவெளியீட்டு விழாவில் பங்கேற்றார்.


விழாவில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராக திகழ்ந்து வருகிறார். மோடியின் தலைமைக்கு, பல்வேறுநாடுகள் ஆதரவு அளிக்கின்றன. மோடி, இந்தியநாட்டிற்கு மட்டுமல்லாது, 125 கோடி மக்களின் பெருமையாகதிகழ்கிறார்.


கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது நாட்டின் கொள்கைகள் பாழ்பட்டுகிடந்தன. அவற்றை, பிரதமர் மோடி, தனது கடினஉழைப்பு, திறன் மிகுந்த நிர்வாகம் உள்ளிட்ட நேர்மறை காரணிகளின் மூலம் சீர்செய்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தி் சென்றுகொண்டுள்ளார் என்று அமித் ஷா கூறினார்.

Leave a Reply