இந்தியாவிலேயே முதன் முறையாக பிரதமர் நரேந்திரமோடி நீரிலும், நிலத்திலும் இறங்கும் விமானத்தில் பயணம் செய்துள்ளார்.

அகமதாபாத் சாலை பயணத்திற்கு மாவட்டநிர்வாகம் அனுமதி மறுத்துள்ள நிலையில், நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு ள்ளதாவது; அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்டமுடியாது. இதனால், மத்திய அரசு நீர்வழிப் பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக சபர்மதி ஆற்றில் கடலில் இறங்கும்விமானம் தரையிறங்க உள்ளது. அந்தவிமானத்தில் தரோய் அணை பகுதியிலிருந்து அம்பாஜி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்ப உள்ளேன்.

அகமதாபாத்தில் சாலைவழி பேரணிக்கு கட்சி திட்டமிட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனையடுத்து. அம்பாஜி கோயிலுக்கு கடலில் இறங்கும்விமானத்தில் செல்ல உள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply