பிரதமர் நரேந்திரமோடி பஞ்சாப் மாநில தலை நகரான அமிர்தசரஸில் உள்ள காசாபகுதிக்கு  வந்தார். 1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரகளுக்கு இங்குள்ள டோக் ராய் பகுதியில் போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் இன்று மலர்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்திய பிரதமர் மோடி, அங்கு ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார். பின்னர் வீரர்களிடையே அவர் பேசியதாவது:-

நமது நாட்டின் படைகளுக்கு தலைமை தாங்கிய வீரர்களின் தீரத்தால் தான் உலக நாடுகளின் மத்தியில் இன்று கம்பீரமாக இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. அவர்களை எல்லாம் நான் பாராட்டுகிறேன். உங்களுடைய வீரதீரம், அர்ப்பணிப் புணர்வு, தியாகம், கனவுகள் ஆகியவற்றை வைத்தே இந்தியாவை இந்த உலகமே மரியா தையுடன் பார்க்கின்றது.

ஆயுதப்படையினரின் சீருடைக்காக மட்டும் இந்தமரியாதை கிடைக்கவில்லை. அவர்களின் நன்னடத் தைக்காக கிடைக்கும் மரியாதையாகும். இன்று தீபாவளி பண்டிகையை உங்களுடன் கொண்டாடு வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இந்தவாய்ப்பு கிடைக்கப் பெற்றமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply