பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிரபாமோடி (78), ஆமதாபாத்தில் தனது மூத்த மகனான பங்கஜ் மோடியுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர் 108 ஆம்புலன்ஸ் வேன்மூலம் காந்தி நகரில் உள்ள மருத்துவ மனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்
 
அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட வழக்கமான பரிசோத னைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர். அனைத்து பரிசோத னைகளும் முடிந்தபின்னர் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது பற்றி அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் பரசிவோரா கூறுகையில்' பிரதமரின் தாயார் ஹிரபாவுக்கு வயது முதிர்வால் ஏற்பட்ட நோய்களுக்கு வழக்கமான சிகிச்சை அளிக்கப் பட்டது. அவர் தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்.
 
இதைத்தொடர்ந்து அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப் பட்டார்.' என்றார். மருத்துவமனை வட்டாரம் தரப்பில் வெளியான தகவலில் பிரதமரின் தாயார் தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply