மேற்கு ஆசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.

பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார் மோடி. பாலஸ்தீனம் செல்லும்வழியில் அம்மான் நகரில் இறங்கி ஜோர்தான் மன்னரையும் பல நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
  
பின்னர், அபுதாபியில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. உலக அரசாங்க மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தியுள்ளது. தொழில்நுட்பமும் கொள்கையுமே துபாயின் வெற்றிக்குகாரணம். தொழில்நுட்பம் தொடர்மாற்றங்களை சந்தித்துவருகிறது என்றார். 

மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர்மோடி இன்று தில்லி வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அதிகாரிகள் மற்றும் வெளியுறவுதுறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

Leave a Reply