பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

ஓமங்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கிறார். பி.எம். நரேந்திரமோடி எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்தவரவேற்பைப் பெற்றுள்ளது.

மோடி சிறு வயதில் டீ விற்றது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றது, குஜராத் முதல்வரானது, பின்னர் பிரதமர் ஆனது என்று அவரின் முன்னேற்றத்தை காண்பித்துள்ளனர்

2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது மோடி இஸ்லாமியர்களை காப்பாற்றுவது ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை எச்சரிக்கிறேன். அவர்கள் நம்மை மீண்டும் தாக்கினால் அவர்களின் கைகளை வெட்டுவேன். எங்களின் தியாகத்தை பார்த்திருக்கிறீர்கள், பழிவாங்குவதை தற்போது பார்ப்பீர்கள் என்ற வசனம் இடம்  பெற்றுள்ளது

 

Leave a Reply