பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 69-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி, அவரின் சொந்தமாநிலமான குஜராத்துக்கு சென்றார். அகமதாபாத் விமான நிலையத்தில் மாநில ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் மற்றும் முதலமைச்சர் விஜய்ரூபானி, மாநில அமைச்சர்களும் தொண்டர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், தனது தாயார் ஹீராபென்னிடம் ஆசிர்வாதம் பெற்று இன்றைய நாளை தொடங்குகிறார் பிரதமர்.
இதையடுத்து பிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவடியாவில் உள்ள சர்தார்சரோவர் அணையை பார்வையிடுகிறார். இந்த அணை முதல்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளதுடன், பிரதமர் வருகையால் அப்பகுதியே வண்ண வண்ண மின்விளக்குளால் ஜொலித்தது. மேலும், அணையின் அருகேகட்டப்பட்ட ஜங்கிள் சஃபாரி மற்றும் சுற்றுலா பூங்காவை திறந்து வைத்து உயர் அதிகாரிகளை சந்திக்கிறார். பின்னர் தனது பிறந்தநாளை முன்னிட்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்

Comments are closed.