முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜிக்கு பிரதமர் நரேந்திரமோடி எழுதிய கடிதத்தை பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தகடிதம் தனது மனது உருக்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது "உங்கள் எளிமை மூலம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருந்து இருக்கிறீர்கள். முன்மாதிரியான தலைமையுடன் எங்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறீர்கள். நீங்கள் அரசியலிருந்து அறிவியல்வரை எல்லா துறை பற்றியும் ஆழந்த அறிவு கொண்டவர் .

நாம் இருவரும் வெவ்வேறு அரசியல் பின்புலத்தில் வளர்க்கப் பட்டிருந்தாலும் , ஜனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையால் இணைந்து பணியாற்றினோம். உங்களைப்போல ஒரு நல்லமனிதரை சந்திப்பது அரிது. உங்களுடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக உள்ளது. நீங்கள் அறிவின் களஞ்சியமாக இருப்பதால், பல்வேறு விஷயங்களில் உங்களது நுண்ணறிவுகண்டு நான் எப்போதும் ஆச்சரியப் பட்டுள்ளேன்.," என கூறி உள்ளார். இந்த கடிதம் இருவரின் நட்புக்கு ஆதரமாக அமைந்துள்ளது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

Leave a Reply