இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, நான்கு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகைதந்தார். செவ்வாய் கிழமை அன்று இந்தியா வந்த ரணில் விக்ரம சிங்கே, இருநாடுகளின் உறவு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார். 

இந்நிலையில், 5-ஆவது உலகளாவிய விண்வெளிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை துவங்கி நடைபெற்றது. இதனை இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். இதில், ரணில் விக்ரம சிங்கே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதையடுத்து நவம்பர் 24-ந் தேதி தனது 4 நாள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து இலங்கை திரும்புகிறார்.

இலங்கையின் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, சிறு மற்றும் குறுதொழில் உள்ளிட்ட துறைகளின் கட்டமைப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான முன்னேற்றத்துக்காக இந்திய அரசால் வளர்ச்சி நிதியாக 2.63 பில்லியன் டாலர்கள் நிதிவரைவு அமைக்கப்பட்டு அதில் இதுவரை 458 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருநாடுகளின் உறவு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply