ஹைதராபாத்: பிரதமர் நரேந்திரமோடியை கொலைசெய்ய திட்டமிட்டதாக குற்றம்சாட்டி, எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனை யாளருமான வரவர ராவ் ஹைதராபாத்தில் கைது செய்யப் பட்டுள்ளார். முன்னதாக ஹைதரா பாத்திலுள்ள வரவரராவ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தெலுங்கானா போலீசார் உதவியுடன் புனேயிலிருந்து வந்திருந்த போலீசார் சோதனைகளை நடத்தினர்.

மூத்த பத்திரிக் கையாளர் குர்மநாத், புகைப்படக்காரர் கிராந்தி ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் குர்மநாத், வரவரராவின் மருமகன் ஆகும். அவர்கள் வீடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே வழக்கு எதுவும் அவர்கள் மீது பதியப் படவில்லை. \

பீமா கோரேகான் கலவரம்தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 5 பேர் புனே போலீசாரால் கைது செய்யப் பட்டனர். அப்போது அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தகடிதத்தில் ஆர் என்ற எழுத்து இடம் பெற்றிருந்தது. ராஜீவ் காந்தி பாணியில், பிரதமர் நரேந்திரமோடியை கொலை செய்ய வேண்டும் என்பது இந்த சங்கேத மொழியின் குறியீடு என்று போலீஸார் கண்டு பிடித்தனர். இந்த கடிதத்தில் வரவர ராவ் பெயர் இடம் பெற்றிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றார்கள். வீரசம் என்ற பெயரில், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு ஒன்றையும் வரவர ராவ் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply