நடிகர் ரஜினி காந்த் நடிக்கும் ‘2.0’ படப்பிடிப்பு டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. 

முக்கிய காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு உள்ளன. இதற்காக ரஜினி, டைரக்டர் ஷங்கர் உள்ளிட்ட படக் குழுவினர் டெல்லி சென்றிருக் கின்றார்கள். ஒரு மாதம் டெல்லியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட் டுள்ளனர்.

ரஜினி காந்த்தும் ஒரு மாதம் டெல்லியில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்தி நடிகர் அக்ஷய் குமாரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள பத்மஸ்ரீ பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் வழங்கும் விழா வருகிற 28–ந் தேதி மற்றும் ஏப்ரல் 12 தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துவருகிறது.

கலைத்துறையில் ரஜினியின் சிறந்த பங்களிப்புக்காக அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது ரஜினி டெல்லியில் இருப்பதால் இந்தவிழாவில் பத்ம விபூஷன் விருதை ரஜினி நேரில் சென்று பெற இருக்கிறார்.

இந்தநிலையில் ரஜினி டெல்லியில் தங்கி இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம்கேட்டு ரஜினி அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சல்மூலம் இருவர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், பத்ம விருது வழங்கும் விழா நடைபெறுவதற்கு முன்பு சந்திக்க நேரம் ஒதுக்கும்படி பிரதமருக்கும், அத்வானிக்கும் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அத்வானி அலுவலக செயல் அதிகாரிகள் மூலம் இந்தகோரிக்கை வைக்கப் பட்டிருக்கிறது.

இதற்கிடையே முதல்கட்டமாக வருகிற 28–ந்தேதி நடைபெறும் விருதுவழங்கும் விழாவிலேயே ரஜினிக்கு விருது வழங்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறையை, பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றிய தகவல் ரஜினி காந்த்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில் பிரதமரையும், அத்வானியையும் ரஜினிகாந்த் சந்திக்க நேரம்கேட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இரு தலைவர்களையும் சந்தித்தபிறகு ரஜினி தமிழக தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கலாம் என்ற எதிர் பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply