பிரதமர் நரேந்திரமோடி, ஜூன், 25 மற்றும் 26ல், அமெரிக்காவில், அதிபர் டிரம்பை சந்தித்துபேசுகிறார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரியில் பதவியேற்றார். இதைதொடர்ந்து, அமெரிக்கா வரும்படி, பிரதமர் மோடிக்கு, டிரம்ப் அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி, ஜூன், 25 மற்றும் 26ல், அமெரிக்கா செல்கிறார். அப்போது, அதிபர் டிரம்புடன், இருதரப்பு உறவுகள்குறித்து விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

இந்த சந்திப்பின் போது, எச் – 1 பி விசாவுக்கு, அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால், இந்திய, தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக, பிரதமர் பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமன்றி, பாகிஸ்தானில் இருந்து துாண்டி விடப்படும், பயங்கரவாதம் பற்றியும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்புதுறை ஒத்துழைப்பு குறித்தும், இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

Leave a Reply