ஜெர்மன் அதிபர் பிராங்க்வால்டர் ஸ்டையின்மர்  நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.  கடந்த 22-ம் தேதி இந்தியா வந்த அவர்,  வாரணாசியில் உள்ள கங்கைநதியில் படகு சவாரி செய்தபடி கங்கையம்மன் ஆரத்தியை கண்டு மகிழ்ந்தார்.  இதே போன்று டெல்லி ஜம்மா மசூதியையும் அவர் அதிகாரிகள் குழுவுடன் பார்வையிட்டார். 

 

இந்தநிலையில் புது டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  பின்னர் சுந்தர் நர்சரியில் இரு வரும் நடந்துகொண்டே கலந்துரையாடினர்.  முன்னதாக வெளியுறத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். 

 

நாளை  (25-ம்  தேதி) சென்னைவரும் ஸ்டெய்ன்மெய்ர், ஒரகடத்தில் உள்ள டெய்ம்லர் (Daimler) கார் நிறுவனத்திற்கு சென்று நிர்வாகிகளுடன் உரையா டுகிறார். பின்னர் ஐ.ஐ.டியின் ஆராய்ச்சிப் பூங்காவைப் பார்வையிட்டு மாணவர்களுடன்கலந்துரை யாடுகிறார். 

 

திங்கட்கிழமை (26-ம்தேதி) ஸ்டெய்ன்மெய்ர் தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாகவும், மாமல்லபுரத்திற்கு செல்லஇருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply