பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கொரோனா நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள், வங்கிகள் மறுசீரமைப்பு, விமான நிலையங்களுக்கு ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லடாக் எல்லையில் 4 இடங்களில் இருந்து சீன படைகள் பின் வாங்கிய நிலையில் அங்கு பதற்றத்தை தணிப்பதற்காக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தெரிகிறது.

பொருளாதார நிதிஉதவி திட்டத்தில் மேலும் சிலதுறைகளுக்கு தனியாக ஒதுக்கீடு செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப் படும் என எதிர்பார்க்க படுகிறது.

Comments are closed.