பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறைகளைப் பற்றி நன்குஅறிந்த அறிவாளி எனவும் உலகளவில் சிந்தித்து உள்நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படுத்த கூடியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா.

2020ஆம் ஆண்டிற்கான சர்வதேச நீதித் துறை மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. அதில், 20 நாடுகளில் இருந்து பலநீதிபதிகள் கலந்து கொண்டனர். விழாவை, பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். விழாவில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா, நீதித்துறைக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் சாதாரணமானவை. இருந்தாலும், நீதித் துறை, இந்த உலகத்தை சீரமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், “கண்ணியமான மனிதர்கள் அதிகமாக இருக்கவேண்டும் என்பதே எங்களது முக்கியமான நோக்கம். பல்வேறு துறைகளைப்பற்றி நன்கு தெரிந்த அறிவாளியான பிரதமர் மோடிக்கு இந்த தருணத்தில் நன்றிகூற கடமைப் பட்டிருக்கிறேன். அவர், உலகளவில் சிந்தித்து, அதனை நம் நாட்டிற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்துவார்” என புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு எனவும் உலகில் உள்ள மக்கள், இந்தியா எப்படி இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்று வியந்து பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இதுமட்டுமல்லாமல், சர்வதேசளவில் மிகவும் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான நாடு இந்தியா எனவும் குறிப்பிட்டார்.

One response to “பிரதமர் மோடி பல துறைகளைப் பற்றி நன்கறிந்த அறிவாளி”