இரு தரப்பு உறவு மற்றும் இலங்கையில், இந்தியா சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆலோசனை நடத்தினர்.

டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்தசந்திப்பு நடந்தது. ஜாப்னா நகரில் இந்தியா சார்பில் கட்டப்பட்டுவரும் வீடுகள், தமிழர்களை மறுகுடிய மர்த்தல்,அதிகார பகிர்வு ஆகியவை குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

இந்தசந்திப்பு தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் மனதில், இலங்கைக்கு சிறப்பான இடம் உண்டு. இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை, பிரதமர் மோடி வரவேற்றார். சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப் பட்டதாக கூறினார்.முன்னதாக, ரணில் விக்ரமசிங்கே, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

Leave a Reply