கேரளாவின் கொச்சிநகரில் முதல் கட்டமாக 25 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோரயில் சேவைக்கான பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் பலரிவட்டம் மற்றும் அலுவா இடையே 13 கி.மீ தூரத்துக்கான பாதை அமைக்கும்பணிகள் முடிவடைந்து, மெட்ரோ ரயிலின் வெள்ளோட்டமும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து முதல் முறையாக கேரளாவில் மெட்ரோரயில் சேவை இன்று முதல் துவங்கப்படுகிறது.

 

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி காலை 10.15 மணியளவில் கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ் கருடா விமானதளத்தில் உள்ள  விமான நிலையம் வந்தார். 

 

கொச்சிவந்த பிரதமரை கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், மெட்ரோ ரயில்நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவையை கொடி அசைத்து துவக்கிவைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி வெங்கையாநாயுடு உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர்.

Tags:

Leave a Reply