குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் மொராரிபாபு. புகழ்பெற்ற ஆன்மீகவாதி. இவர் வருகிற 20-ந்தேதி முதல் 27-ந் தேதி வரை ராமேசுவரத்தில் “ராம் கதா” (ராமாயண சொற்பொழிவு) நடத்துகிறார்.

இதில் குஜராத் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ராமாயண சொற்பொழிவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

மொராரி பாபு அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வருகிற 22-ந் தேதி ராமேசுவரம்வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அன்று காலை டெல்லியில் இருந்து தனிவிமானத்தில் மதுரை வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம்வருகிறார். தொடர்ந்து காரில் ராமேசுவரம் செல்கிறார்.

ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அன்று மாலையே மோடி டெல்லிதிரும்புகிறார். மோடியின் வருகை குறித்த தகவல் இது வரை உறுதி செய்யப்பட வில்லை.

Leave a Reply