பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பாஜக. மேற்கொண்டுவருகிறது.

இந்த பிரச்சாரத்தின் முக்கியநோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்பு கொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத் திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

அவ்வகையில், பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்தியஅரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித்ஷா, சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார்.

Tags:

Leave a Reply