பிரம்மபுத்ரா நதிநீர் கருப்பாக மாறியது இயற்கையானது” என மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் தெரிவித்துள்ளார்.


அருணாசலப் பிரதேசத்தில் பிரம்மபுத்ராவின் முக்கியகிளை நதியாக உள்ளது சியாங். கடந்த இரண்டு மாதங்களாக சியாங்நதியில் உள்ள நீர் கருப்புநிறமாக மாறியது. சியாங் நதிநீரை ஜின்சியாங் மாகாணம் வழியாக டக்லமகான் பாலைவனத்துக்கு திருப்பும் வகையில், தனது யுன்னான் மாகாணத்தில் 600 கிமீ தூரத்திற்கு சீனா சுரங்கப் பாதை அமைத்து வருகிறது. அந்த கட்டுமான பணிகள் காரணமாகவே நதி நீரின் நிறம் கருப்பாக மாறிவருவதாகவும் கூறப்படுகின்றது, சீனா இதை மறுத்துள்ளது. நதி கருப்பாக மாறுவதற்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி விசாரிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த பிரச்னை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நதிநீர் மாசு மற்றும் நிறம் மாறியதற்கான ஆய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளது. மத்திய நீர் ஆணையம் இது தொடர்பாக சமீபத்தில் ஆய்வுமேற்கொண்டது. திபெத்தில் கடந்த நவம்பர் 17ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக நதிநீர் வரும் வழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நதிநீரின் தன்மை மாறியுள்ளது. இயற்கை காரணங்களால் நதியின் நிறம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’  என்று கூறியுள்ளார்.

Leave a Reply