உடல் நலத்துக்கும், மனநலத்துக்கும் உதவுகிற யோகா கலை உலகமெங்கும் பரவும்வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகாதினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

 

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத்தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப் படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகாதினம் இன்று (புதன்கிழமை) கடைப்பிடிக்கப்பட்டது.

 

உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் காலை 6.30 மணிக்கு தொடங்கி பிரம்மாண்ட யோகாநிகழ்ச்சி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் 51 ஆயிரம்பேர் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply