மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண் நிதிஅமைச்சர் என்ற பெருமையை, நிர்மலா சீதாராமன், 59, பெற்றுள்ளார்.

கடந்த, 1970ல், 1970 – 71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, காங்.,கின் இந்திரா தாக்கல்செய்தார். நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து மொரார்ஜி தேசாய் பதவி விலகியதால், பிரதமராக இருந்த இந்திரா அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதுவரை, அதிகமுறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை, மொரார்ஜி தேசாய்க்கு உள்ளது; அவர், 10 முறை பட்ஜெட் தாக்கல்செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான நிர்மலா சீதாராமன், ஹிந்தியில் சிலவார்த்தைகளை பேசியபோது, ஆளும் தரப்பினர், மேஜையைத்தட்டி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பட்ஜெட் தாக்கலின்போது, ஆளும்தரப்பு நிரம்பிவழிந்தது.

ராகுலின் தாயான, சோனியா, தன்பர்ஸை மறந்துவிட்டு சென்றுவிட்டார். அதை, ராகுல் எடுத்துச்சென்றார்.

புதிய மரபுவழக்கமாக பட்ஜெட் தாக்கல்செய்யும் நிதி அமைச்சர்கள், ஒரு ‘பிரீப்கேசில்’ பட்ஜெட் ஆவணங்களை எடுத்து வருவர். அதை கைவிட்டு, நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், சிவப்புநிற, பட்டுத்துணி பைக்குள் ஆவணங்களை வைத்து, நிர்மலா எடுத்துவந்தார். அந்த பையின் மீது, அசோக சின்னமும் இருந்தது.வியாபாரம் செய்வோர், தங்களுடைய வரவு – செலவுகணக்கு புத்தகத்தை, ஒரு பட்டுத்துணியில் வைத்து, பூஜை செய்து, கணக்கை துவக்குவர். இதை, ஹிந்தியில், ‘பாஹி காதா’ என்று கூறுவர். அதை உணர்த்தும் வகையில், பட்ஜெட் ஆவணங்களை, பட்டுத்துணி பையில் வைத்து கொண்டுவந்தார் நிர்மலா.

‘பிரீப்கேஸில் ஆவணங்களை கொண்டுவருவது என்பது, காலனி ஆதிக்கத்தை உணர்த்துகிறது. அதனால்தான், நம் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், பட்டுத்துணி பையில் கொண்டு வந்தார்’ என, நிதி அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.