பிளாஸ்டிக் அரிசிவிவகாரத்தில் தமிழக அமைச்சர்கள் நேரடியாககளமிறங்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக 3 ஆண்டு சாதனைவிளக்க கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய பொன் ராதாகிருஷ்ணன், மலேசியாவில் வைகோ அனுமதிக்கப் படாததற்கும் இந்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை . சென்னை பாஜக. தலைமையகத்துக்கு வெடி மருந்து அனுப்பப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, எதைக்கண்டும் அஞ்சப் போவதில்லை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply