பிளாஸ்டிக் பயன் பாட்டை முற்றிலுமாக தடைசெய்து உள்ளது மஹாராஷ்டிரா மாநில அரசு!!! பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கிய தொழில்!

ஏராளமானவர்களின் வேலை வாய்ப்பை இந்த தடை உத்தரவு பாதித்து இருக்கிறது! அரசுக்கே கூட வரிவருவாயை பாதிக்கும் நடவடிக்கை!.  சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்திருப்பது
பாராட்டத்தக்க செயல்!

உடனே சில நண்பர்கள் மஹாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது! அதனால் பிளாஸ்டிக் தடையை பாராட்டத் தோன்றி இருக்கிறது….தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று விவாதிக்க கிளம்பி வருவார்கள் 😀! அதற்கும் இங்கேயே பதில் சொல்லி விடுவது நல்லது என்பதால்….!

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து இருப்பது போல சுற்றுச்சூழலை பாதிக்கும் எல்லாவற்றையும்
தடை செய்து விட முடியுமா?. முடியாது! பிளாஸ்டிக் தவிர்க்க முடியாத பொருள் அல்ல!. அதைவிட முக்கியமாக
பிளாஸ்டிக் நிலத்தை கொல்கிறது!. கொல்லப்பட்ட நிலத்திற்கு உயிர் அளிக்க முடியாது!. பாதிக்கப்பட்ட நிலத்திற்கு
புத்துயிர் அளிக்க முடியும்!. இது தான் வித்தியாசம்!

தவிர்க்க முடியாத பொருட்களின் உற்பத்தியானது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கினாலும் தடை செய்து விட முடியாது! பாதிப்பை குறைக்க என்ன வழி என்று தான் சிந்திக்க முடியும்!.  பிளாஸ்டிக் பயன்பாட்டை
முற்றிலுமாக தடை செய்வது குறித்து தமிழக அரசும் கூட யோசிப்பது நல்லது! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இதற்காக குரல் கொடுக்க முன்வருவது உண்மையான சமூக சேவையாக இருக்கும்!

நன்றி வசந்தன் பெருமாள்

Leave a Reply