பீஹாரில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க ப்பட்டுள்ளது.

வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பீஹாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சி 50:50 என்ற முறையில் தொகுதி ஒதுக்கீடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்றொரு கூட்டணி கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான், பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து தொகுதிபங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு முடிவுசெய்யப்பட்டு நாளை ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.அந்த கூட்டணியில் இடம்பெற்றிருந்த ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜன சக்தி கட்சி ஆறு இடங்களில் வெற்றி பெற்றிருந்தது அந்த கட்சி அதே அதே எண்ணிக்கையிலான தொகுதியை எதிர்பார்த்தது.

இந்நிலையில் பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சியும், பாஜகவும் பரஸ்பரம் 17 தொகுதிகளில் போட்டியிடுவது என்றும், மீதி 6 தொகுதிகளில் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்குவாய்ப்பு தருவது என்றும் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பீகாரில் மொத்தம் 40 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் தலித் மக்களிடையே லோக் ஜனசக்திக்கு அதிக செல்வாக்கு உள்ளது. நிதீஷ் குமாருக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.பாரதிய ஜனதாவும் 25 சதவீத வாக்கு வங்கியை பெற்றுள்ளது.எனவே பாஜக கூட்டணி சென்ற முறை கைப்பற்றிய தொகுதிகளை விட கூடுதலான எண்ணிக்கையில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளது

Leave a Reply