ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா விலங்குகள் நலஅமைப்பு வழக்கு தொடர்ந்தால், அதை மத்திய அரசு எதிர் கொள்ளும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இந்த உத்தரவை பெறுவதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே எதிர்க் கட்சிகளும் கூட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றியும், வாழ்த்துகளையும் கூறியுள்ளன.

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன்  சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். மதுரை விமானநிலையத்தில், அவருக்கு உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும், மதுரை விமானநிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து, மேள, தாளத்தோடு உற்சாகவரவேற்பு அளித்தனர். ஜல்லிக் கட்டின்போது மாடுகள் கொடுமைப்படுத்தப் படுவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில், தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று பீட்டா எனப்படும் விலங்குகள் நலஅமைப்பு அறிவித்துள்ளது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள்கேட்டனர். அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "பீட்டா வழக்கு தொடர்ந்தால், அதை மத்தியஅரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும்" என்றார்.

Leave a Reply