பீஹார் நலனுக்காகவே பதவி விலகினேன் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய பீஹார் துணைமுதல்வர் தேஜஸ்வி விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டாததால் முதல்வர் நிதிஷ் இன்று (ஜூலை 26) மாலை கவர்னர் கேசவ்நாத்திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு நிதிஷ் அளித்தபேட்டி: பீஹார் நலனுக்காகவும், பீஹார் மக்களின் நலன்கருதியே நான் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். துணை முதல்வரான தேஜஸ்வியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நான் விலக முடிவுசெய்தேன். இது தொடர்பாக ஏற்கனவே தேஜஸ்வியை பதவி விலக சொல்லுமாறு காங். தலைவர், சோனியா, ராகுலிடம் வலியுறுத்தினேன். கூட்டணி தர்மத்துகாகவே இதுவரை அமைதிகாத்து வந்தேன். எஙகளுடைய கட்சியில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரு முதல்வராக என்னால் முடிந்தளவு சிறப்பாக செயல்பட்டேன். நான் ராஜினாமா செய்தாலும், யாரையும் ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்த வில்லை. இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Leave a Reply