பீஹார் சட்டசபை தேர்தலில், இன்று (நவ.,10) காலை 8 மணிக்கு ஓட்டுஎண்ணிக்கை துவங்கியது. இதில் பாஜக ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 128 தொகுதிகளிலும் , லாலு மகன்கட்சி கூட்டணியினர் 100 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநிலத்தின், 243 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுகள், இன்று எண்ணப்படுகின்றன.

இந்த தேர்தலில், ஆளும், தே.ஜ., கூட்டணியில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம், பா.ஜ., மற்றும் சிறுகட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில், ஐக்கிய ஜனதாதளம், 115 தொகுதிகளிலும்; பா.ஜ., 110 தொகுதிகளிலும் போட்டி யிட்டன.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான, மகா கூட்டணியில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்று உள்ளன. சிராக் பஸ்வான் தலைமையிலான, லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிட்டன.

இதில் ஐக்கியஜனதா தளம் பா.ஜ., இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ., 63 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

மெகாகூட்டணி 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ராஷ்டீரிய ஜனதாதளம் 68 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. சிராக் பஸ்வானின் லோக்ஜனசக்தி 3 இடங்களில் உள்ளது.

கடந்த தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து, இந்த கூட்டணியை உருவாக்கின. பா.ஜ., கூட்டணியில் வெற்றி பெற்று, நிதிஷ் குமார் முதல்வரானார் என்பது குறிப்பிட தக்கது. .

Tags:

Comments are closed.